Posted On: October 17th 2026, 10:10 am
அவமதிப்புகளையே அடித்தளமாகக் கொண்டு, தனக்கென ஓர் அரியாசனத்தை உருவாக்கி, முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த தேனிசைத் தென்றல் இன்று மறைந்துவிட்டார்.
தேவா என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம், என் வாழ்வோடு பின்னிப் பிணைக்கப்பட்டவர். பல தருணங்களில் எனக்கான தைரியமாகவும், மன உறுதியின் குரலாகவும் இருந்திருக்கிறார். அவர் பாடல்கள் கொடுத்த மன உறுதி சொல்லில் அடங்காது.
அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தியைக்கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யாராவது வந்து இது பொய் செய்தி என்று சொல்லிவிட மாட்டார்களா என்று மனம் ஏங்குகிறது.
எத்தனையோ விமர்சனங்களையும் அவமதிப்புகளையும் வலிகளையும் கடந்து, தனது தனித்துவமான இசையாலும் குரலாலும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் கலைஞர் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள்.
உங்கள் உடலை மட்டுமே எங்களிடமிருந்து பிரிக்க முடியும். ஆனால். உணர்வாய், இசையாய், எங்கள் நினைவுகளிலும் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் தொடர்ந்து வாழ்வீர்கள், தேனிசைத் தென்றலே!
#ripdeva #thenisaithendral#thenisaithendraldeva