Instagram story viewer> @vannikural> Post
5 hours ago
Photo by வன்னி அரசு | VanniKural on November 03, 2026. May be an image of text.
Photo by வன்னி அரசு | VanniKural on November 03, 2026. May be an image of magazine, newspaper and text.
Photo by வன்னி அரசு | VanniKural on November 03, 2026. May be an image of text.
Photo by வன்னி அரசு | VanniKural on November 03, 2026. May be an image of text.
1
Posted On: November 3rd 2026, 08:03 am
பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மின்வசதிகளை முழுமையாக வழங்கும் திட்டம்!

2026-2027-ஆம் ஆண்டிற்கான சமூக நீதித்துறையின் மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் அறிவிப்பு எண்.36-இல் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளில் பிற நகர்ப்புற மற்றும் ஊரக குடியிருப்புகளுக்கு இணையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஊரக வளர்ச்சித் துறை, வனத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையுடன் ஒருங்கிணைந்து எடுக்கப்படும். முழுமையாக வழங்க நடவடிக்கை மேலும், அனைத்து பழங்குடியினர் குடியிருப்புகளும் முழுமையாக மின்மயமாக்கப்படுவது TANGEDCO மூலம் உறுதி செய்யப்படும். இதுவரை மின் இணைப்பு பெறாத ஒவ்வொரு குடும்பத்திற்கும் முறையான வீட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டு, எந்தவொரு குடும்பமும் விடுபடாத வகையில் மின்சார வசதி முழுமையாக ஏற்படுத்தப்படும்' மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் விதமாக, 2026-2027-ஆம் ஆண்டு ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி, தென்காசி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், திருச்சி. திருப்பத்தூர் மற்றும் சேலம் ஆகிய 13 மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் கிராம அறிவு மையம், மின்மோட்டார் மூலம் பாசன வசதி, சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை, குடிநீர் வசதிகள், பைப் லைன் அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கழிவு நீர் கால்வாய், அங்கன்வாடி மையம், கதிரடிக்கும் களம், மயான காத்திருப்பு கூடம், மயான சாலை மற்றும் கொட்டகை, மயான தகன மேடை, இடுக்காட்டில் சுற்றுச்சுவர், சமுதாய சுகாதார வளாகம், சுற்றுச் சுவர், வெள்ளப் பாதுகாப்பு சுவர், தடுப்புச் சுவர். நியாய விலைக் கடை சிறுவன மகசூல் பொருட்களை பதப்படுத்தி, மதிப்புக் கூட்டுதல் செய்திட கட்டிடம், மேல் இரும்புத் தகடு கூரை, மின் இணைப்பு மற்றும் தானிய உலர்களம் போன்ற 179 அடிப்படை வசதி பணிகளை மேற்கொள்வதற்கு தொகை ரூ.34,01,74,000 (ரூபாய் முப்பத்து நான்கு கோடியே ஒரு இலட்சத்து எழுபத்து நான்கு ஆயிரம் மட்டும்) ஒதுக்கீடு செய்து 30.10.26 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

#ministervanniarasu #Vanniarasu #socialjusticeminister #TamilNaduGovernment #VCKParty
Comments (1)
plshlpme__22 2 minutes ago

plshlpme__22

Sir koncho hlp pannunga sir nano clg student tha ennala nimathiya eruka mudilainga sir pls sir hlp pannunga sir🥺😭😭😭😭😭

More posts

back to up